கொழும்பு நோக்கி விசேட பஸ் சேவை

அலுவலக உத்தியோகத்தர்களின் நலன்கருதி இலங்கை போக்குவரத்து சபையினால் இன்று (16/11) 11 பஸ் சேவைகள் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அதற்கமைய குறித்த பஸ் சேவைகளானது கிரிந்திவெல, யக்கல, கட்டுநாயக்க, பாதுக்க, மத்துகம, ஹொரணை, அவிஸ்ஸாவெல, நிட்டம்புவ, கொழும்பு – கோட்டை, தெமட்டகொடை புகையிரத நிலையம் மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் செல்லும் உத்தியோகத்தர்களை கொவிட் 19 பரவலில் இருந்து பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்த பஸ் சேவை வழங்கப்பட்டதாக அமைச்சர் பவித்திரா குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையை சுற்றி பணிபுரியும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசாங்க நிறுவனங்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் இச்சேவை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

கொழும்பு நோக்கி விசேட பஸ் சேவை

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version