ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் கொழும்பு – எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது.

எதிர்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள், பங்காளி கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பில் பல இடங்களிலும் பொலிஸ் வீதி தடைகள் அமைக்கப்பட்டு, பொலிஸாரினால் கடுமையான சோதனை நடவடிக்கைகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. பொலிஸ் விசேட அதிரடி படையினரும் பொலிஸாருடன் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காலி வீதியிலுள்ள வாகன தரிப்பிடங்கள் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து போராட்டத்திற்கு வருகை தருவதனை முற்றாக தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்படுவதுடன் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே அவர்கள் தடுக்கப்படுவதினால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தந்த இடங்களிலேயே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்சமயம் கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் பேரணியாக கொள்ளுப்பிட்டியை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version