தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸின் இராணுவப் பிரிவை நிறுவியவர்களில் ஒருவரான சலே அல்-அரூரி கொல்லப்பட்டதா ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவர்களான சமீர் ஃபிண்டி அபு அமீர் மற்றும் அஸ்ஸாம் அல்-அக்ரா அபு அம்மார் ஆகியோரும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.