சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் D.S. சேனநாயக சமுத்திர (இக்னியாகல) வான் கதவுகள் திறப்பதினால் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்த நிலைமையினை முகாமை செய்யும் பொருட்டு பிரதேச செயலாளர் S.L. முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் திணைக்களங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் அனர்த்த நிலைமைகளின்போது முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் அக்கிராம மக்களது போக்குவரத்து வசதிக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக உடனடியாக பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை போக்குவரத்துச் சபையின் கல்முனை சாலையால் பேரூந்து (Bus) ஒன்று சம்மாந்துறை போக்குவரத்து சாலையில் ( Reserved ) தரித்து வைக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமைகளின்போது உரிய கிராம சேவை உத்தியோகத்தருக்கு அறிவிப்பதோடு பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம். 0672260293, 0760104567, 0704602825.