மக்கள் மீதான பொருளாதார சுமை விரைவில் நீங்கும் – நலின் பெர்ணான்டோ!

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான பொருளாதார சுமை 75 விகிதமாக குறைக்கப்படும் என வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03.01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நலின் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதனால் நுகர்வோர் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள வரிக் கொள்கையால், எதிர்காலத்தில் பல சலுகைகள் கிடைக்கும் என உறுதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version