இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டிலான போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (05.01) கொழும்பு கோட்டையில் உள்ள இலங்கை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள பெருமளவான இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.