இலங்கையில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துமுகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள “யுக்திய”நடவடிக்கையின் ஒரு கட்டமாக மன்னார் பிரதான பாலத்திற்கருகே அமைந்துள்ள சோதனைச்சாவடியில் மன்னார் நகரிலிருந்து வெளியேறும் பயணிகள் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் ராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் முழுமையாகச் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்கள் போக்குவரத்தில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் கூட இந்த யுக்திய நடவடிக்கையினால் போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டில் சுபீட்சம் மலருமா என்னும் எதிர்பார்ப்புடன் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.