வடக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – வஜிர அபேவர்தன் அறிவிப்பு..!

வடமாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பு வவுனியா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.

ஜனாதிபதியின் வடமாகாண விஜயம் தொடர்பில், வடமாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டம், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகவும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

இதன்போது வடமாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விரைவில் தீர்வுகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply