சோமாலியா கடற்பரப்பில் வர்த்தக கப்பல் கடத்தல்..!

சோமாலியா கடற்பரப்பில் லைபீரியக் கொடியுடன் பயணித்த MV Lila Norfolk எனும் வர்த்தக கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகக் கப்பலில் 15 இந்தியர்கள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பல் பிரேசிலில் உள்ள துறைமுகமொன்றிலிருந்து பஹ்ரைன் நோக்கி பயணித்த போது கடற்கொள்ளையர் குழுவினால் கடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கப்பலை மீட்கும் பணிக்காக இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version