தற்கொலைக்கு தூண்டிய மதபோதகர் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்!

மத விரிவுரைகள் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன மற்றும் அவரது போதனைகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விரிவான விசாரணைகள் தொடர்பிலான உண்மைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (05.01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ருவன் பிரசன்ன குணரத்னவினால் பெறப்பட்ட மற்றும் செலவு செய்யப்பட்ட பணம் தொடர்பில் ஆராயுமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தத்துவ விரிவுரைகளை வழங்கிய ருவான் பிரசன்ன குணரத்ன வேறு அமைப்புகளிடம் பணம் பெற்றாரா என்பதும் அவரது நடவடிக்கையில் மூன்றாம் தரப்பினருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொட்டாவ பிரதேசத்தில் சமய போதகராக பணியாற்றிய ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதுடன் அவரது மனைவி உட்பட ஆறு பேர் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். இவ்வாறு விஷம் அருந்தி உயிரிழந்த 7 பேரின் உடல் உறுப்புகள் மற்றும் அதன் மாதிரிகள் பரிசோதனைகளுக்கு அனுப்பவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version