போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவை இடைநிறுத்தம்..!

பணிக்கு சமூகமளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையினை இடைநிறுத்தி, தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, மின்சார சபைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்த தகவல்களை அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் கடிதத்தில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் சில ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் பொதுச் சேவை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட வர்த்தமானி மூலம் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் 2 ஆம் திகதி முதல் இரத்துச் செய்து குறித்த சேவைகள் அத்தியாவசியமானது என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version