ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதற்காக, அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்யும் ஆலோசனைகளை அவர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது தொடர்பான இறுதி முடிவை எடுக்க கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட இதுவரை 5 பேர் விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.