தனக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் , இந்திய மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாதிருந்தால் நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் என முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி, பிரிமத்தலாவ பிரதேசத்தில் மருந்தகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து 407 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவற்றில் 04 வகையான மருந்துகள் மாத்திரமே தரம் குறைந்தவை எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.