சுவாச நோய்களுக்குத் தேவையான மருந்துகள் பற்றாக்கறை..!

அரச வைத்தியசாலைகளில் சுவாச நோய்களுக்குத் தேவையான பெரும்பாலான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிலவும் காலநிலையினால் ஆஸ்துமா, சுவாச அமைப்பு தொடர்பான நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகரித்து வருவதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version