யாழில் 86 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று பொதிகள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மேற்கொண்ட சோதனைகளின் குறித்த பொதிகளிலிருந்த 48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும், 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும் கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version