இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (08.01) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய சிம்பாவே அணி 44.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது. இதில் கிரைக் ஏர்வின் 82(102) ஓட்டங்களையும், ரயான் புர்ல் 31(37) ஓட்டங்களையும், ஜொய்லோர்ட் கும்பி 30(37) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷண 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர, ஜப்ரி வன்டெர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜனித் லியனகே 95(127) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ரிச்சர்ட் ங்கரவா 5 விக்கெட்களையும், சிகந்தர் ரசா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக ஜனித் லியனகே தெரிவு செய்யப்பட்டார். மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் பின் வரிசை வீரர்களின் துடுப்பாட்ட பங்களிப்பினை இந்த வெற்றியினை இலங்கை அணி தனதாக்கியது.