தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் 41 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் இன்று நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பை கோரினார்.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னணி ,சுயாதீன உறுப்பு ஆகியன புறக்கணித்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிராக வாக்களித்துள்ளனர்.