மன்னாரில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 54 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று காலை அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட டெங்கு தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து த.வினோதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியான மழை காரணமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் 204 பேர் டெங்கு யோயினால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.