இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (11.01) முதலாவது T20 போட்டியாக மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. இதில் மொஹமட் நபி 42(27) ஓட்டங்களையும், அஸ்மதுல்லா ஓமர்ஸை 29(22) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முகேஷ் குமார், அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷிவம் டுபே ஆட்டமிழக்காமல் 60(40) ஓட்டங்களையும், ஜிதேஷ் ஷர்மா 31(20) ஓட்டைகளையும் பெற்றனர். பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த போட்டியின் நாயகனாக ஷிவம் டுபே தெரிவு செய்யப்பட்டார்.