உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 4 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, உலக சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.04 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அத்துடன், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.58 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.