கனமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு “ஏர் நிலம்”அமைப்பின் மனிதாபிமானப் பணி

தாயக மக்களுக்கு பல்வேறுபட்ட சமுக நலப்பணிகள் ஆற்றிவரும் “ஏர் நிலம்” அமைப்பு அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

சுவிட்சர்லாந்து கோல்டாக்,செங்காளன் மாநிலத்தில் வசிக்கும் திரு.வீரகத்தி சிவராசா அவர்களின் 373200 ரூபாய் நிதியுதவியில் தலா 5000 ரூபாய் பெறுமதிமான உலருணவுப் பொதிகள் கிளிநொச்சி,முல்லைத்தீவு ,மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள 73 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் ஜோசப் வாஸ் நகர் உதயபுரம்,துள்ளுகுடியிருப்பு ,நடுக்குடா,பாவிலுப்பட்டங்கட்டி குடியிருப்பு, கவயன்குடியிருப்பு, கீளியன்குடியிருப்பு போன்ற இடங்களில் தனிமையில் வாழும் முதியவர்கள்,சிறு குழந்தைகளையுடைய குடும்பங்கள், மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த உலருணவுப் பொதிகள் மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவினைச் சேர்ந்த “ஏர்நிலம்”நிர்வாகிகளூடாக வழங்கி வைக்கப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version