சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது..!

சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பெலன்வத்தை பகுதியில் பயிற்சி வகுப்பினை நிறைவு செய்து வீட்டிற்கு சென்ற சிறுவனை ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.

தமது நண்பரின் வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறும் சிறுவனிடம் கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் செல்லும் போது சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் சிறுவனுடன் பயணித்த விதம் சிசிடிவி கெமெராவில் பதிவாகியுள்ளதுடன், வீதியொன்றுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து 27 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version