டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் அதிகளவான சிறுவர் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் கடந்த 13 நாட்களில் மாத்திரம் நான்காயிரத்து 671 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.