பெண்களுக்கான அதிர்ச்சி தகவல்..!

கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை ஆபாசமாக படம்பிடித்த குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவொன்றில் பெண் வைத்தியர்களுக்கான அறையொன்றில், நவீன கையடக்க தொலைபேசியினூடாக நுட்பமான முறையில் காணொளி பதிவு செய்துள்ளமை, கண்டி தலைமையக பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சுகாதார உதவியாளர் தொண்டை, காது, மூக்கு அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர் என்றும், கடந்த 12ம் திகதி நுட்பமான முறையில் பொருத்தப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியினை வைத்தியர் ஒருவர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த வைத்தியர் ஏனைய வைத்தியர்களுக்கு அறியப்படுத்தியதையடுத்து கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த காணொளிகளை ஆய்வு செய்ததில், நீண்ட காலமாக வைத்தியர்கள் ஆடை அணிகையில்; காணொளி பதிவு செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர், குறித்த சுகாதாரப் பணியாளர் கைது செய்யப்பட்டதுடன் கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரைக்கமைய பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Social Share

Leave a Reply