கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் பரீட்சை நிலையமொன்றில் கடமையாற்றும் ஊழியரான சந்தேகநபர் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக வினாத்தாள்களை அனுப்பியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் ஒருவர் முன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.