பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று 14/01 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், மன்னார் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் (DCDB) இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பிலேயே சட்டவிரோத போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த நபரைக் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது 3910 போதை மாத்திரைகளை வைத்திருந்த மன்னார் உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகள் காரணமாக பல கடத்தல்காரர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதுடன், கடத்தல் நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த நபர் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (15.01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.