சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் விடேச கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தி சுயதொழில் முயற்சியாளர்களின் சுயபொருளாதாரத்தினை வலுப்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் பெண் தலைமைத்துவ முயற்சியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்பார்ப்புகளையும், தொழில்சார் நடைமுறை பிரச்சினைகளையும் தெரிவித்திருந்தனர்.

குறித்த விடயங்களில் அவதானம் செலுத்திய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் .. உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட வரைபினை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் எனவும், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முற்சிகளை ஊக்குவிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகளையும் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், சுயதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், வங்கிகளின் முகாமையாளர்கள, சுயதொழில் முயற்சியாளர்கள், ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version