மக்களை மரணப்படுக்கைக்கு தள்ளி விட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு குரn எடுத்து வருதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 67 ஆவது கட்டமாக,கலாவௌ சிறிமாபுர மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்
கூலித்தொழிலாளர்களின் அன்றாட வருமானத்தை பறிக்கும் அரசாங்கமே நாட்டில் காணப்படுவதாகவும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்; சுகாதாரத்துறை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பணம் இல்லையென அரசாங்கம் கூறினாலும் ஜனாதிபதியின் செலவுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக மேலும் 2000 இலட்சம் மேலதிக மதிப்பீட்டின் ஊடாக ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்படுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 2000 இலட்சம் ரூபா எவ்வாறு இன்றியமையாததோ அவ்வாறே நோயாளிகளுக்கான வழங்கப்படும் சுகாதார சேவைகளுக்கும் போதுமானதாக காணப்படாது.
பலவீனமான தலைமைத்துவத்தினால் சுகாதார சேவை முடங்கியுள்ளமை தெளிவாக தென்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் சுகாதார சேவையே முடங்கிக் கிடக்கும் வேளையில் நாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமற்றது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.