சின்ஹலீஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் செபாஸ்டியன் கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று (16.01) மேயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு சின்ஹலீஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் SSC அணி 71 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சம்பியனாகியுள்ளது.
நூணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய SSC அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது. இதில் கிரிஷான் சன்ஜுல 84(125) ஓட்டங்களையும், சமிந்து விக்ரமசிங்க ஆட்டமிழக்காமல் 36(43) ஓட்டங்களையும், ஷெவோன் டானியல் 35(58) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இசித்த விஜேசுந்தர, துஷான் விமுக்தி, சமிக்கார எதிரிசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், தரிந்து ரத்னாயக்க, ப்ரொமோட் மதுவந்த ஆகியோர் தலா ஓவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய செபாஸ்டியன் அணி 42 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களை பெற்றது. இதில் சமிக்கார எதிரிசிங்க 37(76) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரிய 3 விக்கெட்களையும், ஜிஷான் பாலசூரிய, நுவனிது பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், நிசல தரக, தனுஷ்க குணதிலக ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.