கொழும்பு, விஜேராம மாவத்தையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்காக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இன்று முற்பகல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
டீன் வீதி, குலரத்ன மாவத்தை, டி.பி. ஜயா மாவத்தை உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்க்கும் நோக்கில்; இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து பல்கலைக்காக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொலிஸார நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.