தமிழரசு கட்சியின் புதிய தலைவர் அறிவிப்பு..!

மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் ஸ்ரீதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தநிலையில், 187 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 136 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிவஞானம் ஸ்ரீதரன் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பார் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது இதுவே முதற்தடவை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version