ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு..!

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் கழுத்தில் கயிறு சிக்கியுள்ளது.

இதன்போது, சிறுவன் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில்; 10 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் நடைபெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version