இந்தியாவின் புகழ்பெற்ற தலமான திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும், திருப்பதி ஏழுமலையானுக்கு கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஓர் பகுதியாக இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கப்பட்டு, விரைவில் மஹாகும்பாபிஷேக விழாவுடன் திறக்கப்பட உள்ளது.
அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமுகர்கள் உள்ளடங்கலான பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவின் திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமுகர்கள் உள்ளடங்கலான குழுவினர் சிலாபம் – முன்னேஸ்வரம் ஆலயத்திற்குரிய இடத்தை பார்வையிட்டுள்ளனர்.
இலங்கையின் வட மேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் முன்னேஸ்வரத்தில், இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானம் போன்ற ஆலய கட்டுமானப் பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், விரைவில் ஆலயத்திற்கு உரிய பூமி பூஜை நடைபெற திருவருள் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி TST அறக்கட்ளை முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் தலைவர் – சிவசேனா அமைப்பு தமிழ்நாடு திரு. கே.சசிகுமார் மற்றும் சாய்சமர்ப்பனா சாரிடபிள் ட்ரஸ்ட் பவுண்டர் முகாமைத்துவ டிரஸ்டி திரு. ஜே.என்.ஜெகத் ராம்ஜீ ஆகியோரின் தலைமையில் இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் வளாகத்தில் நேற்றைய தினம்இடம் பெற்றது.

– ரஞ்சித் ஜோய்