19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணததின் 4 ஆம் நாள் முடிவுகள்

பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நேற்று (22.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 8 ஆவது போட்டி புலூம்பொன்டெய்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களை பெற்றது. இதில் கியான் ஹில்டன் 90(113) ஓட்டங்களையும், ஜோர்டன் நெய்ல் 31(47) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மருப் மிரிதா, ஷெய்க் பவீஸ் ஜிபொன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மஹ்புசுர் ரஹ்மான் ரப்பி, MD ரபி உஸ்ஸமன் ரபி, ரொஹனட் டௌல்லா போர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது. இதில் மொஹமட் ஷிஹாப் ஜேம்ஸ் ஆட்டமிழக்காமல் 55(54) ஓட்டங்களையும், அஹ்ரர் அமின் ஆட்டமிழக்காமல் 45(63) ஓட்டங்களையும், அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி 44(60) ஓட்டங்களையும், அடில் பின் சிடிக் 36(63) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கொட் மக்பெத் 2 விக்கெட்களையும், ஜோன் மக்னல்லி, மத்தியூ வெல்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக மொஹமட் ஷிஹாப் ஜேம்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கிடையில் நேற்று (22.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 9 ஆவது போட்டி கிம்பர்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய நமீபியா அணி 33.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் யாரும் சரியாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் கலும் விட்லர் 4 விக்கெட்களையும், டொம் ஸ்டகர் 3 விக்கெட்களையும், மஹ்லி பெயர்ட்மான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களை பெற்றது. ஹக் வெய்ப்கன் ஆட்டமிழக்காமல் 39(43) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஜக் ப்ரஸல் 3 விக்கெட்களையும், ஹன்ரோ படென்ஹொர்ஸ்ட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக கலும் விட்லர் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version