நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை மறுப்பதாக ஆசிய இணையக் கூட்டணி அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
நிகழ்நிலைகாப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் இந்த சட்டமூலத்தினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் நேரடி பாதிப்பு ஏற்படும் எனவும சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய இணையக் கூட்டணி என்பது உலகின் பல சக்திவாய்ந்த இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு தொழில் நிறுவனமாகும்.
Apple, Pinterest, Grab, Amazon, Line, Google, Yahoo, Booking.com, Spotify, X (Twitter), Rakuten,; Meta, மற்றும் FedEx ஆகிய பிரபல நிறுவனங்கள் ஆசிய இணையக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.