உயிரிழந்த பாடகி பவதாரிணியின் பூதவுடலை சென்னைக்கு எடுத்து செல்வதற்காக அவரின் சகோதரர் யுவன் சங்கர்ராஜா சற்றுமுன்னர் இலங்கை வந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் மாலை உயிரிழந்தார்.
கொழும்பிலுள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் இன்றைய தினம் சென்னைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.