பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது 85 ரூபா வழங்கப்படும் நிலையில் 115 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், நிதியமைச்சின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் அடுத்த வாரமளவில் எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.