துருக்கியில் இன்று (27.01) 5.01 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (25.01) கிழக்கு துருக்கியில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியல் 2023 பெப்ரவரி மாதம் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தின் விளைவாக 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
இன்றைய தினம் ஏற்பட்ட நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.