பெலியத்தையில்; ஐவர் பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
காலி – ரத்கம பகுதியில் நேற்றைய தினம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து குறித்த சந்தேக சபர் துப்பாக்கிகளை எடுத்து சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கொலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்தின் சாரதி; எனவும் கொலைகளை திட்டமிட்டுள்ளார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.