பெலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்திதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் அவர்கள் கைதாகியுள்ளனர்.
பூஸா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 57 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்களே ஹங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பெலியத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.