19 வயதிற்குட்பட்ட உலககிண்ணத்தின் 14 ஆவது நாள் முடிவுகள்

பங்களாதேஷ் மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையில் நேற்று (31.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 29 ஆவது போட்டி புலூம்பொன்டெய்னில் சுப்பர் சிக்ஸ் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. இதில் பிஷல் பிக்ரம் KC 48(100) ஓட்டங்களையும், தேவ் கானல் 35(60) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரொஹனட் டௌல்லா போர்சன் 4 விக்கெட்களையும், ஷெய்க் பவீஸ் ஜிபொன் 3 விக்கெட்களையும், இக்பல் ஹொசைன் எமொன், மறுப் மிரிதா, ஜிஷன் அலாம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 25.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது. இதில் அரிபுல் இஸ்லாம் ஆட்டமிழக்காமல் 59(38) ஓட்டங்களையும், ஜிஷன் அலாம் 55(43) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபாஷ் பந்தரி 5 விக்கெட்களை பெற்றார்.

இந்த போட்டியில் நாயகனாக ரொஹனட் டௌல்லா போர்சன் தெரிவு செய்யப்பட்டார்.

அவுஸ்திரலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (31.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 30 ஆவது போட்டி கிம்பெர்லீயில் சுப்பர் சிக்ஸ் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக் வத் லுயிஸ் முறையில் 110 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹக் வெய்ப்கன் 120(126) ஓட்டங்களையும், ஹரி டிக்சன் 53(63) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தியோ வய்லி 4 விக்கெட்களையும், செபாஸ்டியன் மோர்கன், டஸீம் செளத்ரி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் யாரும் சரியாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் கலும் விட்லர் 4 விக்கெட்களையும், ரப் மக்மில்லன் 3 விக்கெட்களையும், டொம் ஸ்ட்ரேகர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக ஹக் வெய்ப்கன் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version