எரிபொருள் விலை திருத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவுக்கும் இடையில் இன்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
குறைந்தபட்ச பஸ் கட்டணம் முதல் அனைத்து கட்டணங்களும் அதிகரிக்க வேண்டும் என பஸ் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குறித்த கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.