மஞ்சள் சார்ந்த அழகுசாதன பொருட்களை உற்பத்தி செய்வதற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கொட்டாவ, ருக்மல்கமவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு வருடத்திற்கு முன் காலாவதியான எழுபத்தெட்டு தொன் மஞ்சள் என நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மஞ்சள் கையிருப்பின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
காலாவதியான மஞ்சள் மீட்கப்பட்ட கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.