இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 35 ஆவது போட்டி பொட்செப்ஸ்ட்ரூமில் சுப்பர் சிக்ஸ் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 119 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது. இதில் லுவான் ட்ரே ப்ரெடோரியஸ் 71(77) ஓட்டங்களையும், ரிலி நோர்டன் ஆட்டமிழக்காமல் 41(69) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபுன் வதுகே, மால்ஷா தருபதி, விஷ்வ லஹிரு ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 23.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷாருஜன் ஷண்முகநாதன் 29(32) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் க்வேனா மாபாகா 6 விக்கெட்களையும், ரிலி நோர்டன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக க்வேனா மாபாகா தெரிவு செய்யப்பட்டார்.