வவுணதீவில் சிறப்பாக இடம்பெற்ற மூலிகைக் கன்றுகள் நடும் நிகழ்வு!

இலங்கையின் 76 வது சுதந்திர தின விழா வைபவத்தை முன்னிட்டு ”சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்” எனும் தொனிப்பொருளில் பிரதமரினால் முன்மொழியப்பட்ட 2024.02.04 ஆம் திகதி நாடு பூராகவும் மூலிகைக் கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது நேற்று (02.02) திகதி மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பயன்தரும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைக் கன்றுகள் பல மண்முனை மேற்கு பிரதேச செயலக வளாகத்தினுள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version