இலங்கை, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – ஆப்கானிஸ்தான் சிறந்த மீள் வருகை

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி 75 ஓவர்களில் 01 விக்கெட்டை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் இப்ராஹிம் ஷர்டான் ஓட்டங்களை 101 ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். இது அவரின் முதல் சதமாகும். நூர் அலி ஷர்டான் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரஹ்மத் ஷா ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்கள். முதல் இன்னிங்சில் தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சில் சிறப்பாகவே துடுப்பாடி வருகிறது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 101.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 439 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்க ஆகியோர் 93 ஓட்டங்களை பகிர்ந்தனர். அதன் பின்னர் மூன்று விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ். டினேஷ் சந்திமால் ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இலங்கை அணியை முன்னணிக்கு எடுத்துக் சென்றனர். இருவரும் 232 ஓட்டங்களை பகிர்ந்தனர். அஞ்சலோ மத்தியூஸ் 141 ஓட்டங்களையும். டினேஷ் சந்திமால் 107 ஓட்டங்களையும் பெற்றனர். இது மத்தியூஸின் 16ஆவது டெஸ்ட் சேதமாகும். சந்திமால் தனது 15 ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். திமுத் கருணாரட்ன 77 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

தலைவராக பதவியேற்று முதற் போட்டியில் விளையாடும் தனஞ்சய டி சில்வா முதற் பந்திலேயே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அறிமுக போட்டியில் சிறப்பாக துடுப்பாடிய சாமிக்க குணசேகர உபாதை காரணமாக 16 ஓட்டங்களுடன் தொடர்ந்து துடுப்பாட முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

தனது முதற் போட்டியில் விளையாடும் நவீட் ஷர்டான் 4 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார். கெய்ஸ் அஹமட், நிஜாட் மசூட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. இதில் ரஹ்மத் ஷா 91(139) ஓட்டங்களையும், நூர் அலி சட்ரன் 31(46) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஸ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், பிரபாத் ஜயசூர்ய, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

அணி விபரம்

இலங்கை

திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, குஷல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், தனஞ்ஜய டி சில்வா(தலைவர்), சதீர சமரவிக்ரம, சமிக்க குணசேகர, பிரபாத் ஜயசூர்ய, விஸ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னான்டோ

ஆப்கானிஸ்தான்

இப்ரஹிம் சட்ரன், நூர் அலி சட்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷஹிடி(தலைவர்), நசிர் ஜமால், இக்ரம் அலிகில், சியா உர் ரெஹ்மான், குயைஸ் அஹமட், நிஜாத் மசூத், மொஹமட் சலீம், நவீத் சட்ரன்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version