”மீண்டும் அரசியல் ரீதியாக ஏமாந்து விடவேண்டாம் மக்களே” – எதிர்கட்சித் தலைவர்

நாட்டில் சிலர் அழகான வார்த்தைகளை கூறி,மீண்டும் மக்களை ஏமாற்ற பலரும் காத்திருக்கும் நிலையில், இனிமேலும் பலவிதமான ஏமாற்றுகளுக்கு ஆளாக வேண்டாம். இந்நேரத்தில் நாட்டுக்கு‘பதில்களும், தீர்வுகளும், நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுமே’ தேவையாகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க,
பாரம்பரிய கட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய வழியில் சிந்திக்கும் வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவை.நமது நாடு தற்போது 90 பில்லியன் அமெ.டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது,இந்த கடனை அடைக்கும் வரை நமது நாடு வங்குரோத்தான நாடாகவே அறியப்படும். இதை வைத்து பெருமைப்பட முடியாது,மகிழ்ச்சியடைய முடியாது. இது வருத்தமளிக்கும் விடயம்.இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற நபர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து,இழந்த வளங்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தர்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 85 ஆவது கட்டமாக,காலி பலபிட்டிய ரேவத தேசிய பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (04.02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் சிலருக்கு புதிதாக ஒன்றைச் செய்வதற்கும், முன்னேறுவதற்கும் விருப்பமற்ற மனோபாவத்தில் உள்ளனர். முன்னேற விரும்பவில்லை.கால மாற்றங்களோடு பொருந்திப் போகாத,மேம்படுத்திக் கொள்ளாத,வளர்ச்சிப் பாதையில் நடைபோடாதவற்றை தவிர்த்து, கால மாற்றங்களோடு மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடை போடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.சிலர் பழைய விடயங்களில் மாத்திரம் தொங்கிக் கொண்டிருக்கவே சதாவும் எதிர்பார்ப்பு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version