கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாவி வீதியில் உள்ள குரிங்கம்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக இரு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டியிலிருந்து பலாவி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று மாற்று வீதியில் திரும்பும் போது அந்த வீதிக்கு முன்னால் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.
சாரதிகள் உட்பட இரு முச்சக்கர வண்டிகளிலும் 8 பேர் பயணித்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் சிலர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.