தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்தினை வடிவமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தனது கட்சியின் சின்னத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், கட்சியின் சின்னம் குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கட்சியின் சின்னம் தொடர்பான தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.