தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் குஜராத் மாநில முதலமைச்சர் பூபெந்திரபாய் பட்டேலை சந்தித்துள்ளனர்.
காந்தி நகரின் மாநில சட்டவாக்கப் பேரவையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உபாய மார்க்கங்கள் மற்றும் மாநில நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படப்பட்டுள்ளது.
இதன் பின்னர், மாநிலத்தின் கைத்தொழில் அமைச்சருடனும் விசேட சந்திப்பு இடம்பெற்றதோடு, இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தி மாதிரியான “குஜராத் மாதிரி” தொடர்பாக விரிவாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
வலுச்சக்தி மறுசீரமைப்பு, விவசாயம், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கைத்தொழில் மற்றும் முதலீடு, சுகாதாரப் பாதுகாப்பும் பெண்களுக்கு வலுவளித்தல் என்பன இந்த குஜராத் மாதிரியின் பிரதான பிரிவுகள் என தெரிவிக்கப்படுகின்றது.